பாகிஸ்தானைச் சேர்ந்த சில அமைப்புகளே காஷ்மீர் இளைஞர்களை தவறாக வழிநடத்துகின்றதென மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர், அங்கு செய்தியாளர்களை சந்தித்து இவ்வாறு குறிப்பிட்டார்.
பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே ஏற்படும் மோதல்களின்போது, இராணுவத்தினர் மீது இளைஞர்கள் கல்வீச்சிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த ராஜ்நாத் சிங், காஷ்மீர் மக்களின் கைகள் கல் எறிவதற்காக பயன்படக் கூடாதென்றும், அம் மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்து நிரந்த தீர்வு காணுவோம் என்றும் குறிப்பிட்டார். அத்தோடு, காஷ்மீர் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இதேவேளை, கடந்த காலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட செயற்பாடுகளை சுட்டிக்காட்டிய ராஜ்நாத் சிங், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் எல்லையில் தீவிரவாத ஊடுருவல் 45 சதவீதம் குறைவடைந்துள்ளதென மேலும் தெரிவித்தார்.