சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை அமைச்சர் மனோ கணேசன் குழுவினர் வழங்கியுள்ளனர்.
நேற்றைய தினம் (03) பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டு உதவிகளை வழங்கிய பின்னர் கலந்துரையாடலில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த கலந்துரையாடலில், அமைச்சர் மனோ கணேசன், ஜனநாயக மக்கள் முன்னணி அங்கத்தவர்கள், மாகாணசபை உறுப்பினர் குருசாமி, குணரத்ன, எஸ். ராஜேந்திரன், அவிசாவளை அமைப்பாளர்கள் அப்பாதுரை, தங்கதுரை, சிறீதரன், சேகர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது, அப்பகுதி கிராம சேவகருடன் கள நிலைமைகள் தொடர்பில் கலந்தாலோசித்துள்ளனர்.