நேற்று நள்ளிரவு 11.45 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மகராஷ்டிராவின் தெற்குப் பகுதியிலுள்ள சங்க்லி, கோலாப்பூர் உள்ளிட்ட இடங்களிலும் உணரப்பட்டுள்ளது
வட இந்தியாவின் பல இடங்களில் நேற்று முன்தினம் அதிகாலை 4.20 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதோடு, ஹரியானாவின் கொஹோனாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாகவே மகராஷ்டிராவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. எனினும் சேத விபரங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
கொய்னா பகுதியில் ஏற்கனவே கடந்த மாதம் 20ஆம் திகதி மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.