பராக்கிரமபாகு மன்னன் கூறியதைப் போன்று, பூமியில் விழும் ஒவ்வொரு நீர்த்துளியும் வீணாகாமல் நீர்ப்பாசனத்திற்கு சென்றிருக்குமானால் இன்று பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருக்காதென உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக நாட்டின் மூன்று பிரதான கங்கைகளான களு கங்கை, ஜின் கங்கை மற்றும் நில்வளா கங்கை ஆகியவற்றின் நீரை முறையாக முகாமைத்துவம் செய்யாமையே வெள்ள அனர்த்தத்திற்கு காரணமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த கங்கைகளுக்கு அணை கட்டி நீரை முகாமைத்துவம் செய்ய கடந்த 2001ஆம் ஆண்டு சீனா அரசாங்கத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க முயற்சித்த போதும், அதற்கு அரசியல் சக்திகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மக்களையும் தூண்டி விட்டதாக குறிப்பிட்ட அமைச்சர், அன்று அணை கட்டியிருந்தால் இன்று இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டிருக்காதென குறிப்பிட்டார்.
இந்நிலையில், இப்போதாவது இன் அவசியத்தை புரிந்துகொண்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் இல்லாவிட்டால், இன்னும் பத்து வருடங்களில் 20 ஆயிரம் உயிர்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரித்தார்.