இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் மைதானத்தில் நேற்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெற்றது.
போட்டி நடைபெற்ற போது பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த ஜோடி படுவைரலானார்கள்.
இதற்கு காரணம், அப்பெண் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக அந்நாட்டு உடையை அணிந்து கொண்டு உட்கார்ந்திருந்தார்.
அவர் தோள் மீது கை போட்டு உட்கார்ந்திருந்த ஆண் இந்திய அணிக்கு ஆதரவளிக்கும் விதமாக இந்தியாவின் தேசிய கொடியை உடல் மீது போர்த்தியிருந்தார்.
இருவரும் தத்தமது தேசிய அணிகளை ஆதரித்து குரல் எழுப்பியபடி போட்டியை ரசித்தனர்.
இவர்கள் கணவன் மனைவியா, காதலர்களா அல்லது மைதானத்தில் சந்தித்து நட்பானவர்களா என தெரியவில்லை.
நேற்று கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக இந்த ஜோடியின் முகமும் அடிக்கடி பெரிய திரையில் காட்டப்பட்டது.