“லண்டன் தாக்குதல்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளாலேயே வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன” என குறித்த அமாக் முகவர் நிலையம் தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு லண்டன் பிரிஜ் பகுதியில் நுழைந்த மூன்று ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கிருந்த பொதுமக்களை வெள்ளை வான் ஒன்றைக்கொண்டு மோதிச் சாய்த்ததுடன் அருகில் இருந்த ஏனையோர் மீது கத்திக்குத்து தாக்குதலையும் மேற்கொண்டனர்.
எனினும் பொலிஸாரின் எதிர்த்தாக்குதலின் போது குறித்த தீவிரவாதிகள் மூவரும் அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். அதே வேளை, இந்த சம்பவத்தின் போது குறைந்தது 48பேர் படுகாயமடைந்தனர்.
முஸ்லிம்களின் புனித மாதமான ரமழான் ஆரம்பமாகியுள்ள நிலையில் டிரக் வண்டிகள், கத்திகள் மற்றும் வான்கள் என்பவற்றை உபயோகித்து முஸ்லிம்கள் அல்லாத ஏனையோரை படுகொலை செய்யுமாறு ஐ.எஸ். தீவிரவாதிகள் ஏனைய முஸ்லிம்களுக்கு கட்டளை விடுத்திருந்த நிலையிலேயே இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த மூன்று மாதகாலப்பகுதியில், பிரித்தானியாவில் நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.