தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா சென்னையில் நடைபெற்ற போது, தி.மு.க.வினர் தமிழர்களின் பாதுகாவலர்கள் என குறிப்பிட்டிருந்தனர். இது குறித்து மார்த்தாண்டத்தில் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே தமிழிசை இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.
இலங்கையில் தமிழர்களை சிங்கள இராணுவம் கொன்று குவித்தபோது மத்தியில் காங்கிரஸும், மாநிலத்தில் தி.மு.கவும் இணைந்து கூட்டணி ஆட்சி செய்தனர். இவர்கள் நினைத்திருந்தால் கூட்டம் ஒன்றை நடத்தி இனப்படுகொலையை தடுத்திருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.
அப்பாவி தமிழ் மக்களை ஏமாற்றுவதில் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி முன்னின்று செயற்பட்டுள்ளது என்றும், இதற்கான நல்ல பாடம் தற்போது வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முதலில் உங்கள் கட்சியினர் செய்து வரும் குற்றச்செயல்களை குறைத்துக்கொள்ளுங்கள் எனவும் தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார்.