சர்வதேச சூழல் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வு, பாடசாலை அதிபர் சு.அமிர்தலிங்கம் தலைமையில் இன்று நடைபெற்றது.
பிரதம விருந்தினர்களாக மாவட்ட சுற்றாடல் ஆலோசகர் இ.மாதவன், தெற்கு கல்வி வலய சுற்றாடல் ஆலோசகர் ஏ. ஜெய்கீஸன் கோட்ட கல்வி வலய சுற்றாடல் ஆலோசகர் ஸ்ரீரஞ்சன், மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வசந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பாடசாலை பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மாணவர்களின் விழிப்புணர்வு தொடர்பான பேச்சுக்கள் , நாட்டியம், நாடகம் என்பன இடம்பெற்றன.
வரவேற்புரையை ஆசிரியர் ஈஸ்வரன் வழங்கினார். பாடசாலை கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளுக்கென லண்டன் வீ – 3 அமைப்பினர் கழிவகற்றும் வாளிகளை அன்பளிப்பு செய்தனர்.
இதனை மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் வழங்க ஆசிரியர் குரூஸ் பெற்றுக்கொண்டார். அதிபர் விருந்தினர்களின் சிறப்புரைகளும் இடம்பெற்றன.
சுற்றாடல் குழு பொறுப்பாசிரியர் வசந்தி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தியுள்ளார்.
சூழல் தொடர்பான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் எடுத்துச்செல்வதற்கு இந்த நிகழ்வு பெறுமதி மிக்கதாக அமைந்தது.
இதேவேளை, ஓவியம் கட்டுரை கண்காட்சிப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .