அதிக எடையுடைய காரணத்தால் ஃபெட் போய் (Fat Boy) என புனைப்பெயரிடப்பட்டுள்ள குறித்த ரொக்கெட், உள்ளூர் நேரப்படி மாலை 5.28 க்கு வங்கக் கடலில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.
சுமார் 640 தொன்கள் எடை கொண்ட குறித்த ரொக்கெட், ஐந்து ஜம்போ ஜெட் விமானங்களின் எடைக்கு சமம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் சுமார் 15 வருட கடும் முயற்சியின் பின்னரே குறித்த ரொக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.
இந்த முயற்சி வெற்றியளிக்கும் பட்சத்தில் விண்வெளி தொடர்பான விடயங்களுக்கு இந்தியா ஏனைய நாடுகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இனிவருங்காலங்களில் இந்தியாவின் விண்வெளி வெளியீட்டு வர்த்தகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.