ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இஸ்ரேலுக்கு எதிரானதாகக் காணப்படுகின்றது.இதன் காரணமாக சீர்திருத்தங்கள் அவசியம் என அமெரிக்கா கருதுகின்றது எனஇராஜதந்திரிகளும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மூன்று வார அமர்வு முடிவடைந்த பின்னர்அதிலிருந்து விலகுவது குறித்து அமெரிக்கா தீர்மானிக்கும் என ஐக்கியநாடுகளுக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கிஹேலி கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இஸ்ரேல் குறித்து கடும் நிலைப்பாட்டைஎடுத்ததன் காரணமாக ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் ஆட்சிக்காலத்தில் அதிலிருந்துஅமெரிக்கா விலகியதும், பின்னர் பராக் ஒபாமா காலத்தில் இணைந்ததும்குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா விலகலாம் என்ற செய்தி அதன் சகாக்கள் மத்தியில் அச்சமூட்டியுள்ளது.