முக்கிய தீவிரவாதியான குராம் பட் வாட்ஸ் அப்பில் அவன் என்ன வைத்திருந்தான் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவையே உலுக்கிய லண்டன் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட 3-பேரை பொலிசார் சம்பவ இடத்திலே சுட்டுத் தள்ளினர்.
மூவரும் சம்பவ இடத்திலே பலியாகினர். இந்த மூவரும் தங்கள் உடல்களில் போலியான வெடிக்கும் குண்டுகளை வைத்திருந்தனர் என பொலிசார் தெரிவித்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட மூன்று தீவிரவாதிகளில் இரண்டு தீவிரவாதிகளின் புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
அதில் ஒருவனின் பெயர் Khuram Shazad Butt(27) மற்றொருவரின் பெயர் Rachid Redouane இருவரும் லண்டனில் தான் வசித்து வந்துள்ளனர்.
Khuram Shazad Butt பிரித்தானியாவின் குடிமகன், ஆனால் அவன் பிறந்த இடம் பாகிஸ்தான் என்றும் அதே போன்று Rachid Redouane லிபியாவைச் சேர்ந்தவன் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் Khuram Shazad Butt பயன்படுத்திய வாட்ஸ் அப் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் Khuram Shazad Butt தாக்குதல் நடத்துவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அதாவது புதன் கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 06.59 மணி வரை வாட்ஸ் அப் பயன்படுத்தியுள்ளான்.
அதற்கிடையில் அவன் கடந்த மே மாதம் 10-ஆம் திகதி தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் அல்லா கூறுவது என்று கூறி குரான் 94:6 என்று குறித்த வாசகத்தை வைத்துள்ளான்.
அதைத் தொடர்ந்து தனது புரோபைல் பிக்சரிலும் குரான் தொடர்பான வாசகத்தையே வைத்திருக்கிறான். அதில் நியாயமாக பேசு, கருணையுடன் பேசு, வீணாக பேசாதீர் என்பது தொடர்பான வாசகத்தை வைத்துள்ளான்.