பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் தமது வாக்குரிமையை தவறாது பயன்படுத்தி தங்களுடைய அபிலாசைகளை பிரித்தானிய பாராளுமன்றில் வலுவாகக் குரல் கொடுக்கக் கூடியவர்களை பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அந்த வகையில்,
இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்
சிறிலங்கா அரசின் தமிழ் மக்களுக்கெதிரான இன அழிப்பினை தடுத்து நிறுத்தல்
ஐ.நா மனித உரிமைக் கழகத்தின் தீர்மானங்களை காலவரையறையுடனான திட்டத்தின் அடிப்படையில் முழுமையாக அமுல்படுத்த வேண்டும்
என்பனவற்றை முன்வைத்து செயல்படும் வேட்பாளருக்கு முன்னுரிமையளித்து ஆதரவளிக்குமாறு குறித்த பேரவை தெரிவித்துள்ளது.