கிழக்கு மாகாண முதலமைச்சர் 1700 பேருக்கு ஆசிரியர் தொழில் கொடுக்க நேர்முகப்பரீட்சை நடத்தி வருகிறார். அதனை நாம் முற்றாக எதிர்கின்றோம்.
இன்னுமின்னும் 2012 இலும் அதனையடுத்து வரும் பட்டதாரிகளும் குறிப்பாக கலை வர்த்தக நுண்கலைப் பட்டதாரிகள் மிகவும் பாதிக்கப்படவுள்ளனர்.
கிழக்கு மாகாண ஆளுநரும் இந்த விடயத்தில் பாராமுகமாக இருப்பது எமக்கு வேதனையளிக்கின்றது.
நாடாளுமன்ற குழுத்தலைவராக இருந்து இங்கு வந்த மாரசிங்க எம்.பி எமக்களித்த 2 மாதகால வாக்குறுதி காற்றில் பறந்துவிட்டது. நாம் யாரை நம்புவது?
எத்தனை நூறு நாட்கள் சென்றாலும் நாம் எமது இறுதி இலக்கை அடையும் வரை பின்வாங்கப் போவதில்லை என தெரிவித்தனர்.