ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேற்று நடத்தப்பட்ட குறித்த முற்றுகை நடவடிக்கையின்போது பெண் ஒருவரை பணயக் கைதியாக பிடித்து வைத்திருந்த யாக்கூப் என்பவர், கடந்த 2009ஆம் ஆண்டு சிட்னி இராணுவ தளத்தை தாக்கத் திட்டமிட்டார் எனும் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே அவர் பெண் ஒருவரை நேற்று பணயக் கைதியாக வைத்திருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கைக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்னர் Seven Network எனும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு யாக்கூப் தொலைபேசி அழைப்பு விடுத்து ஐ.எஸ். இன் கட்டளைப்படியே தான் செயற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆயினும், ஐ.எஸ். இற்கும் யாக்கூப்பிற்கும் இடையில் தகவல் பரிமாற்றங்கள் நடைபெற்றதற்கான எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.