டோனிக்கு முன்பாக இறங்கியது குறித்து ஹர்திக் பாண்ட்யா விளக்கம் அளித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராம்பி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதற்கு முக்கிய காரணம் முதலில் விளையாடி இந்திய அணி 48 ஒவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 319 ஓட்டங்கள் குவித்தது.
குறிப்பாக இந்திய அணியில் களமிறங்கிய 5 வீரர்களில் 4 பேர் அரைசதம் விளாசினர்.
வழக்கமாக 5-வது இடத்தில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் டோனி தான் களமிறங்க வேண்டும். ஆனால் 46.2-வது ஓவரில் யுவராஜ் சிங் அவுட் ஆன போது, டோனிக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா களமிறக்கப்பட்டார்.
இது சற்றே அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும், கடைசியில் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யாவும் அதிராடியாக விளையாடி 3 ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார்.
டோனிக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா எப்படி களமிறக்கப்பட்டார் என்பது குறித்து கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில், இது குறித்து ஹார்திக் பாண்ட்யா கூறுகையில், 46-வது ஓவரில் பயிற்சியாளர் கும்ளே சொல்லிய போது தான் எனக்கு முன் கூட்டியே இறங்குவது தெரியவந்தது.
நீ தான் அடுத்து இறங்க போகிறாய், பேடை கட்டிக் கொள் என்று கும்ளே என்னிடம் கூறினார். உடனடியாக நான் பேட் கட்டி கொண்டேன். நான் கை உறையை போட்ட உடன் யுவராஜ் அவுட்டாகி விட்டார் என்று கூறியுள்ளார்.