மார்ச் மாதம் 26-ஆம் திகதி கோயமுத்தூரில் இருந்து காரில் புறப்பட்ட மூன்று பெண்கள் நேற்று பிரித்தானியாவின் தலைநகரான லண்டன் வந்தடைந்துள்ளனர்.
கோவையை சேர்ந்த மீனாட்சி அரவிந்த் (45) பொள்ளாச்சியை சேர்ந்த மூகாம்பிகா ரத்தினம் (38) மும்பாயைச் சேர்ந்த பிரியா ராஜ்பால் (49) ஆகியோர் இந்த துணிகரப் பயணத்தில் ஈடுபட்டனர்.
இந்த மூவரையும் வரவேற்கும் நிகழ்வு நேற்று மாலை லண்டனின், வெஸ்ட்மின்ஸ்ரரில் அமைந்துள்ள இந்திய தூரகத்துக்கு முன்பாக நடைபெற்றுள்ளது.
வரவேற்பு நிகழ்வில் துணைத் தூதர் தினேஷ் கே பட்நாயக், அமைச்சு இணைப்பாளர் ஏ.எஸ்.ராஜன் உட்பட இந்திய தூரக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
மார்ச் 26-ஆம் திகதி கோயமுத்தூர் ராமகிருஷ்ணா கல்லுாரி மைதானத்தில் துவங்கிய இப்பெண்ககளின் பயணம் நேற்று மாலை லண்டனை வந்தடைந்தவுடன் நிறைவு பெற்றது.
கோவையில் இருந்து புறப்பட்ட துணிச்சல் மிக்க பெண்களின் இப்பயணம் பல்வேறு மாநிலங்கள் வழியாக, மியான்மர், சீனா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, பெலாரஸ், போலந்து, சுலோவாக்கியா, ஹங்கேரி, பல்கேரியா, மசிடோனியா, சேர்பியா, ஒஸ்ரியா, செக் குடியரசு, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ் என, பல நாடுகள் வழியாக லண்டனில் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது.