கையலில் ஏற்பட்ட விரைப்பு தன்மைக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பின்னர் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வைத்தியர்களின் கவன குறைவு காரணமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இரத்தினபுரி கொடிகமுவ பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான கே.ஆர் பாலித என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சில காலமாக கையில் ஏற்பட்ட விரைப்பு தன்மைக்கு சிகிச்சை செய்வதற்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விரைப்பு தன்மையை இல்லாமல் செய்வதற்காக கழுத்து பகுதியில் சத்திரசிகிச்சை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
சத்திரசி கிச்சையின் பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சத்திரசிகிச்சையின் பின்னர் நரம்பில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அதிக இரத்த போக்கு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக நீதிமன்ற வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.