டேனிஷ் அகமது என்ற பயங்கவரவாதியே ஹண்ட்வரா பொலிஸ் நிலையத்தில் இன்று சரணடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இவர் ஜம்மு காஷ்மீரில் இடம்பெற்ற பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், சமூக வலைத்தளங்களின் மூலம் தீவிரவாதத்ததை பரப்பும் செயல்களில் தான் ஈடுபட்டதாக டேனிஷ் அகமது தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு தளபதியான சப்ராஸ் அகமதுவின் இறுதிச் சடங்கில் கைக்குண்டு ஒன்றுடன் டேனிஷ் அகமது பங்கேற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.