வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் விக்னேஷ்வரன் விசாரணை குழு ஒன்றை நியமித்திருந்தார்.
இந்த விசாரணை குழுவின் அறிக்கை கடந்த மாதம் 19ஆம் திகதி முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிலையில் மேற்படி அறிக்கை ஊடகங்களுக்கும் கசிந்தும் இருந்தது.
நேற்றய தினம் நடைபெற்ற வடமாகாணசபையின் 94ஆம் அமர்வில் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் முதலமைச்சர் விக்னேஷ்வரன் நேற்றய அமர்வுக்கு வராமையினால் அறிக்கை சபைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்றைய தினம் விசேட அமர்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
இன்றைய அமர்வில் முதலமைச்சர் மேற்படி விசாரணை குழுவின் அறிக்கையை சபைக்கு சமர்ப்பித்தார்.
இதேவேளை, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமைக்கு பாராட்டு தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் சி.தவராசா பொறுப்பு கூறலுக்கும், வெளிப்படை தன்மைக்கும் முதலமைச்சர் கொடுக்கும் முக்கியத்துவத்துக்கும் பாராட்டு தெரிவித்தார்.