முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளில் மக்கள் மீள்குடியேறியுள்ள நிலையில், காணிகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை பகுதியில் தென்னந்தோட்டத்தினை துப்பரவு செய்தபோது வெடிக்காத நிலையில் எறிகணைகள் காணப்பட்டுள்ளன.
இதனால் அச்சத்துடனேயே இப்பகுதியில் வாழ்ந்து வருவதாக அந்த பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில்,
இவ்வாறான வெடிபொருட்கள் தொடர்பில் பொதுமக்கள் பிரதேச செயலகம் மற்றும் கிராம அலுவலர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல்களை வழங்குமாறு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான பதாதைகள் மற்றும் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.