இந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை முதலமைச்சரின் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
ஐக்கிய இராச்சியத்தின் உறுப்புரிமை கொண்ட 17 நாடுகளின் பிரதி நிதிகளும் இலங்கையின் தற்போதைய நிலை எவ்வாறு அமைந்துள்ளது என்பது பற்றியும், தமது ஈடுபாடுகள் எவ்வாறு அமைய வேண்டு என்பது தொடர்பிலும் ஆராய்வதற்காக வருகை தந்துள்ளனர்.
அரசியல் ரீதியாகவும், சமூகம் சார்ந்தும் பல வகையில் பாதிக்கப்பட்டுள்ளோம். முழுமையாக எமக்கு உரித்துக்கள் தரப்படாத நிலையிலும், அரசியல் யாப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்படாத நிலையிலும் உள்ளதாக வடக்கு முதல்வர் கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவராத நிலையில் பழைய நிலையிலேயே தரித்து நிற்கின்றோம்.
அவை தவிர்க்கப்பட வேண்டியதுடன், பல முன் ஏற்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் அராசங்கத்துடன் பேசுவதாக உறுதியளித்துள்ளதாகவும் முதலமைச்சர் ஊடகவியலாளர்களுக்கு கூறியுள்ளார்.