Wembley பகுதியைச் சேர்ந்த பத்ரேஷ் ஷா என்ற 49 வயதுடைய நபரையும்,அவரது மகன் அபிஷேக் ஷா என்ற 25 வயதுடைய நபரையுமே பொலிஸார் தேடி வருகின்றனர்.
லண்டனில் பண மோசடியில் ஈடுபட்டு, தற்போது தலைமறைவாகியுள்ள தந்தை மற்றும் மகனை கண்டு பிடிப்பதற்கு லண்டன் பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பண மோசடி தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் நடைபெறும் போது சந்தேகநபர்கள் இருவரும் முன்னிலையாகி இருந்தனர்.
அதன் பின்னர் அவர்கள் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களின் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு அவர்களுக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே அவர்களை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிணையில் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, சந்தேகநபர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, சந்தேகநபர்கள் தொடர்பில் அடையாளம் தெரிந்தால், 101 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி எண்ணுக்கும் 0800 555 111 என்ற தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சந்தேகநபர்களின் குற்றச் செயல்கள் தொடர்பில் தந்தைக்கு 12 வருட சிறை தண்டனையும், மகனுக்கு 9 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக லண்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த இருவரும், Wembley மற்றும் இந்தியாவுடன் தொடர்பு கொண்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளதுடன், அவர்கள் தொடர்பில் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் லண்டன் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.