அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கும் இடையிலான சந்திப்பு நியூயோர்க்கிலுள்ளஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றது.
உண்மையைக் கண்டறிதல், பொறுப்புக்கூறல், நட்டஈடு வழங்கல், மீள் நிகழாமை ஆகிய 4காரணிகளை அடிப்படையாகக்கொண்டு இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும் என்று ஐ.நா. பொதுச் செயலாளரிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கஉறுதியளித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பெரும் வரவேற்பளித்த ஐ.நா. பொதுச்செயலாளர், ஐ.நா. சமுத்திரவியல் கருத்தரங்கில் பங்கேற்றதற்காக நன்றிகளையும்,பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.
இதன்போது சமகால நிலைவரங்கள் பற்றியும் பேசப்பட்டது. அவ்வேளையிலேயே பிரதமர்ரணில் விக்கிரமசிங்க மேற்படி உறுதிமொழியை வழங்கியுள்ளார் என்று பிரதமர்அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசமைப்பு மீளமைப்பு, நல்லிணக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஏனையவிடயங்களைக் கட்டியெழுப்பவது பற்றியும் கவனம் செலுத்தப்படும் எனவும் பிரதமர்குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் இலங்கையுடன் இணைந்து செயற்படும்என்றும், இலங்கை சிறந்த நிலைக்கு வர வேண்டும் என்பதே ஐ.நாவின் எதிர்பார்ப்பாகஇருக்கின்றது என்றும் ஐ.நா. செயலாளர் கூறியுள்ளார்.
அதேவேளை, இயங்கையில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் பற்றியும் இந்தச்சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக்கட்டியெழுப்புவதற்கு நிதி வழங்குவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நாவின் புதிய பொதுச் செயலராக அன்டோனியோ குட்டெரெஸ் கடந்த ஜனவரி மாதம்பொறுப்பேற்ற பின்னர், இலங்கைத் தலைவரொருவர் அவரைச் சந்தித்துப் பேச்சுநடத்தியிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
அதேவேளை, பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலர் பற்றீசியா ஸ்கொட்லன்டையும்பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.