தமிழ் இலக்கிய உலகின் பிரதான ஆளுமைகளில் ஒருவர்.இசை, நடனம், எழுத்து, சோதிடம், யோகா , தத்துவம், வரலாறு, ஆய்வுகள், எனப் பல தளங்களில் இயங்கும் இவர் கலை அன்பைத்தான் அதிகம் வையகத்தில் விதைத்து நிற்கின்றது என குரு பக்திடன் தன் குருவிற்கு ஞான கானம்.நூல் எழுதிய கலாநிதி ஜெயவித்யா நரசிம்மன் அவர்களுடன் ஓர் உரையாடல்….
உங்களை பற்றி சிறு அறிமுகம் தரமுடியுமா…?
நிச்சயமாக எனது பெயர் டொக்டர்.ஜெயவித்யா நரசிம்மன் திருச்சி ஸ்ரீரங்கத்திலிருந்து வந்திருக்கின்றேன் நான் B.A MA M.phil PHD ஆகிய பட்டங்களையும்,இதழியல்,யோகா,சோதிடம் ஆகியவர்களில் முதுநிலை பட்டமும் M.A வையவம் பட்டத்தினையும் பெற்றுள்ளேன்.
எனது 10 வயதிலிருந்தே சங்கீதம் முறைப்படி கற்றுக் கொண்டேன் எனது சங்கீத குரு ஸ்ரீ கோவிலடி ரெங்கராஜன். எனது பெரியதந்தை மந்த்ர ரத்ணாகரம் சு.ராமானுஜம் அவர்களும் எனது தந்தை வித்துவான் சு.நரசிம்மன் அவர்களும் எனது சோதிட குரு.
தற்போது பல ஆராய்ச்சிகளை செய்து கொண்டிருக்கின்றேன். International foundation for cultural studies என்ற மையத்தின் செயலாளராகவும் இருக்கிறேன்.
உங்கள் பல்துறைசார் நிபுணத்துவ உருவாக்கத்தில் உங்கள் இளமைக் காலச் சூழல் செலுத்திய தாக்கம் பற்றி சொல்ல முடியுமா?
நிபுணத்துவம் என்று சொல்லி விட முடியாது ஏதோ ஒரு துளியைத்தான் கற்றுக் கொண்டிருக்கின்றேன் எனது சிறுவயதிலேயே என் தாய் இறந்து விட்டார் நாங்கள் மூன்று பெண்கள் இளைய சகோதரர் எனது தாய் சங்கீதம் கற்றுக் கொண்டிருக்கின்றார் என்பது மட்டும் தெரியும் ஏனெனில் அவர் சங்கீதம் கற்றுக் கொண்ட கையெழுத்துப் பிரதி என்னிடம் உள்ளது.
எனது தந்தைக்கு கலையில் மிகுந்த ஆர்வம் அவருக்கு ஆண்குழந்தை பெண்குழந்தை என்ற பேதம் கிடையாது குறிப்பாக பெண் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் பிள்ளைகளில் ஏதேனும் பிரச்சினை என்றால் துணிந்து தனியாக போராடி வாழ வேண்டும். என்று சொல்வார். அதனால் எனக்கு வாய்ப் பாட்டையும் எனது சகோதரிக்கு மிருதங்கத்தையும் எனது தம்பிக்கு மிருதங்கத்தையும் என்னுடைய மாமன் மகன்கள் இருவர் எங்களுடன் வளர்த்தனர். அவர்களில் ஒருவருக்கு வயலினையும் மற்றவருக்கு தபேலா வாசிப்பதையும் கற்றுத்தந்தார்.
மாணவியரான நாங்கள் அனுபவித்தவை. தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் அவர் பதவியேற்ற பின் அவருடனான என் தொடர்பு முற்றாக துண்டிக்கப்பட்டு விட்டது.
என் முதுமானி பயில்வுக்கு ஆய்வேடு சமர்ப்பிக்கப்பட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுவிட்டது ‘பரதநாட்டியமும் கதகளியும் ஒர் கட்டுரை சமர்பிக்க எண்ணியிருந்தேன். அதற்கு தகுதியான திறமையான அறிவார்ந்த நெறியாளர் ஒருவர் அத்தியாவசியம் திருமதி.ஞானா குலேந்திரன் இதற்கு மிகத் தகுதியானவர் என்பதை உணர்ந்தேன்
முன்னறிவிப்பு எதுவுமின்றி தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் போய் நின்றேன். காலில் சக்கரம் கட்டியவர் போல் அங்குமிங்கும் அவர் செயல்பட்டதைக் கண்டேன். அன்றையதினம் நினைவுப் பேருரையொன்றுக்குத் தலைமை தாங்கி நடாத்த வேண்டிய பொறுப்பு இருப்பதாக அவர் கூறினார்.
இத்கைய சூழ்நிலையிலும் அவர் இன்முகத்துடன் வரவேற்று தான் நெறியாளராக இருப்பதற்கான சம்மதக் கடிதத்தினை உடனடியாக எழுதித்தந்தார்.
நான் அவரைச் சந்தித்தது காலை வேளை இருந்த போதிலும் எங்கள் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்து விட்டு மாலை நேரம் நடைபெறவுள்ள நினைவுப் பேருரையிலும் கலந்து கொள்ளுமாறு அன்புக் கட்டளையிட்டார்.
தந்தை பாடா விடினும் கேள்வி ஞானத்தில் நாங்கள் சாதகம் பயிற்சி செய்யும் போது தவறுகளை சுட்டிக்காட்டுவார்.
வீட்டில் எந்த நேரமும் வானொலியில் கர்நாடக இசைதான் ஒலிக்கும். வீட்டின் அருகிலேயே கச்சேரிகள் நடக்கும் அதிலேயே கலந்து கொள்ளுவேன். கல்லூரியில் வீணை இசை பயின்றேன். ‘அரைஞ்சர் சேவை’ என்ற நூலை எழுதுவதற்காக சிறிது நடனப்பயிற்சியும் பெற்றேன்.
நீங்கள் இந்த துறையினை தெரிவு செய்வதற்கான காரணம்?
எனக்கு கணக்கில் விருப்பம் அதிகமுண்டு. ஆனால் கல்லூயில் என்ன பாடம் எடுக்கலாம் என்று முடிவு செய்யாமல் இருந்தபோது எனது மூத்த சகோதரியின் தோழிதான் கல்லூரியின் இசைத்துறைத் தலைவர். அவர் எனது சகோதரியிடம் உனது தங்கை நன்றாக பாடுகின்றாள் அவரை பீ.ஏ மியூசிக் சேருங்கள் நான் பார்த்துக் கொள்ளுகின்றேன் என்றார். அவ்வாறே அங்கு எனது பட்டக்கல்வியைத் தொடர்ந்தேன்.
அங்கேயே முதுகலைமானிப்பட்டததையும் செய்தேன்.
இசை நடனத்துறையில் நீங்கள் நுளைவதற்கான காரணிகள்?
காரணங்கள் என்று எதுவும் இல்லை இசைத்துறையில் நுளைந்தேன். பின்னர் கலைத்துறையை தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆவலில் நடனத்துறையில் நுழைந்தேன்
நீங்கள் வாசிக்கும் திறன் உடையவராக இருக்கின்றீர்கள் அதில் யாருடைய புத்தகங்களை அதிகம் வாசிப்பீர்கள்?
உண்மையை சொல்லப் போனால் கல்லூயில் படிக்கும் காலங்களில் கல்லூரி பாடப் புத்தகங்களைத் தவிர வேறு எந்த புத்தகங்களையும் வாசித்தது இல்லை. M.Philps.. சேர்ந்த போது கூட முதல் மூன்று மாதங்களிலும் தமிழ் பல்கலைக்கழக நூலகத்திலுள்ள ரமணிச்சந்திரன், கல்கி, பட்டுக் கோட்டை பிரபாகர், சாண்டிலியன், போன்றவர்களின் கதைப்புத்தகங்களைத் தான் அதிகம் வாசித்தேன். பிறகும் தற்பொழுதும் கலைத் தொடர்பாக யார் எழுதியிருந்தாலும் வாசிப்பேன்.
நீங்கள் எழுத வந்த பின்புலம்….?
m.philps செய்யும் போதே சிறுசிறு கட்டுரைகளை எழுதி வாசிக்க பழக்குவார் எனது ஆய்வு நெறியாளர் பேரா. ஞானா குலேந்திரன் அவர்கள் பின்னர் அதுவே தொடர்கதையாகி விட்டது.
உங்கள் ஆய்வுகளின் ஆரம்ப கால கட்டம் அதன் வளர்ச்சி பற்றி சொல்லுங்கள்..?
ஆய்வென்றால் என்னென்று தெரியாது ஆரம்பத்தில் எனக்கு ஞானா அம்மா ஆய்வென்றால் என்ன அதை எப்படி செய்ய வேண்டும் அதன் வழிமுறைகள் என ஆய்வு பற்றிய முழுமையான விடயப்பரப்புக்களை கற்றுத்தந்தார்.
நாம் செய்யும் ஆய்வுகள் தரமானதாகவும் தெளிவாகவும் இருக்கவேண்டும் என்று எப்போதுமே வலியுறுத்துவார். அப்படித்தான் ஆய்வு செய்யும் முறைமையை கற்றுக் கொண்டேன் .
ஆய்வுக்கு தேவையான தகவல்களை உரிய இடங்களுக்கு சென்று நேர்காணல் மூலம் தகவல்களை சேகரித்து வரவேண்டும்.
PHD முடிந்த பிறகு ஞானம்மா செய்து கொண்டிருந்த புதுதில்லி பல்கலைக்கழக மானியக்குழுவின் பெருந்திட்டத்தில் ஆய்வுத்திட்ட உதவியாளராக மூன்றரை ஆண்டுகள் பணியாற்றினேன்.
இது எனது ஆய்வு வளர்ச்சிக்கு பெருந்துணையாக இருந்தது.
இதனைத் தொடர்ந்தே நூல்கள் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தின் ஊடாக நூல்களை எழுதத் தொடங்கினேன்.
இதுவரை நிங்கள் எழுதிய நூல்கள் பற்றிக் கூறுங்கள்…?
- இராம நாடகக் கீர்த்தனை நந்தனார் சரித்திரக்கீர்த்தனை – ஓப்பீட்டாய்வு
- அழகர் குறவஞ்சி இசை
- இசை உளவியல்
- இசை ஆய்வு மலர்கள்
- Araiyar serai
- இசை தமிழ் மேதையர் இணை ஆசிரியர்
- ஞானா கானம் பதிப்பாசிரியர்
- கண்ணன் ஓடலீலைக்கும்மி
- Fine Arts in Triveragam Temple
- ஞான கானம். ஆகிய நூல்களை எழுதியிருக்கின்றேன்.
உங்களுடைய அவுஸ்ரேலியாவிற்கான வருகை பற்றிக் கூறுங்கள்.?
பதில் நான் இங்கு வருவேன் என்று கனவிலும் நினைக்;கவில்லை. பேராசிரியர் ஞானா குலேந்திரன் அம்மா அவர்களின் எண்பதாவது அகவையை முன்னிட்டு ஞான கானம் என்ற முத்து மலரை எழுதினேன்.
இந்த நூலை எங்கு வெளியிடலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்த வேளை யாழ் வேம்படி பழைய மாணவர் சங்கத்தின் சிட்னி கிளையினர் தாங்கள் வெளியீட்டு நிகழ்வை செய்வதாக கூறியிருந்தார்கள். அதற்காக பேராசிரியர் ஞானா குலேந்திரன் அம்மா என்னை அவுஸ்ரேலியாவிற்கு வர வழைத்தார். ஞானா அம்மா மற்றும் அவரது கணவரால் முதுமையின் காரணமாக தஞ்சாவூர் வரை பயணித்து வர முடியாத காரணத்தினால் அவுஸ்ரேலியாவில் இந்த நூலை வெளியிட முன்வந்தனர்.
நூல் வெளியீடு 2016 மார்கழி மாதம் 10ந்திகதியன்று வெளியிடுவதற்காக திட்டமிட்டிருந்தோம். பல சிரமங்களுக்கு மத்தியில் எனது பயணம் ஆரம்பித்து குறித்த காலத்திற்கு அவுஸ்ரேலியா வந்தடமைந்தமையும் வெகு சிறப்பாக நிகழ்வு நடைபெற்று இருந்தமையும் எனது அவுஸ்ரேலியா வரவிற்கு திருப்தி யளிக்கின்றது. அவுஸ்ரேலியாப் பயணமே எனது முதல் அவுஸ்ரேலியாப் பயணம். வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வில் ஒன்று.
உங்களுக்கும் பேராசிரியர் ஞான குலேந்திரன் அம்மாவிற்கும் உள்ள உறவு நிலை பற்றி……
ஞானஅம்மாவிடம் ஒர் ஆய்வு மாணவியாகத்தான் சேர்ந்தேன். ஆராய்ச்சி மாணவியாகவும் திட்ட உதவியாளராகவும் சேர்ந்து பத்து வருடங்கள் அவருடன் இணைந்திருந்தேன். இந்த பத்து வருடப் பிணைப்பு பத்து மாத பந்தமாக உரு மாறியது.
அன்றிலிருந்து உறவு நிலை தாய் சேய் நிலையே எமக்குள் உள்ளது.
நீங்கள் எழுதிய ஞானா கானம் நூல் திருமதி ஞான குலேந்திரன் அம்மையார் தமிழ்துறைக்கான சான்று…….
தமிழ்த் துறைக்கு மட்டுமின்றி கலைத்துறைக்கும் சான்று என்று உறுதியாகச் சொல்லுவேன்.
முத்தமிழ் வித்தகி இந்த ஞானா கானம் என்ற நூல் அவரது முழுத்திறமைகளையும் பறைசாற்றுகின்றது உங்களால் வரையறுக்க முடியுமா?
ஞானாகானம் என்ற நூல் ஞானம்மாவின் முழுத்திறனையும் வெளிப்படுத்தவில்லை இன்னும் அவரைப் பற்றி சொல்ல இன்னும் நிறைய இருக்கின்றது என்பதை இங்கு வந்து அவருடன் இருந்த போது தெரிந்து கொண்டேன்.
ஞானா கானம் என்ற இந்த நூல் ஞானம்மாவின் சாதனைகளில் ஒரு துளி என்று தான் சொல்ல முடியும்.
ஞானகானம் என்ற நூலை எழுத வேண்டுமென்று உங்களை தூண்டிய காரணி…?
பேராசிரியர் ஞானாம்மாவின் மணிவிழாவையொட்டி ஞானா கானம் என்ற மணி விழா மலரை 2003ம் ஆணடு தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் வெளியீட்டிருந்தோம்.
இந்த நூல் இசை நடனம் தொடர்பான 55 ஆராய்ச்சி அறிஞர்களின் கட்டுரைகளும் பேராசிரியர் பணியாற்றிய போது இருந்த 08 துணைவேந்தர்களின் வாழ்துரைகளும் இடம் பெற்றன.
நான் ஞானாம்மாவின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் முகநூல் வாயிலாகவும் வாழ்த்துச் செய்தியை அனுப்புவேன்.
ஞானாம்மாவின் எண்பதாவது அகவையை ஆரம்பிக்கும் போது ஏதோ ஒன்று இவருக்கு செய்ய வேண்டும் என்று தோன்றியது. தீடீரென முளைத்து விட்டதுதான் இந்த ஞானா கானம்.
அவருடைய வாழ்கை வரலாற்றை ஆவணமாக தாயாரித்து ஞானம்மாவிற்கு குரு தட்சனையாக வழங்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.
அதற்கான தரவுகளை இணைய மூலமும் ஞானாம்மாவின் வாய் மொழி மூலமும் பெற்று இந்த நூலை எழுதினேன்.
ஞானாகானம் நூலை தொகுத்து எழுதுவதற்கு உங்களின் நண்பர்களின் பங்களிப்பு….
இந்த நூலை எழுத முற்படும் போது ஞானம்மாவின் வாழ்க்கை கலைத் தொண்டு அவரது படைப்புக்கள் சொன்னால் முழுமைபெறாது என்று எண்ணினேன்.
ஆதனால் அவரின் நெறிகாட்டுதலின் கீழ் முனைவர் பட்டம் பெற்றவர்களை இணைத்து அவர்களுக்கும் ஞானாம்மாவிற்கும் இருக்கும் தொடர்பினை அவர்கள் வாயிலாகக் கேட்டு இந்த நூலில் இணைத்திருக்கின்றேன்.
அது மட்டுமல்லாமல் ஞானாம்மாவுடன் பணியாற்றியவர்களும் அவர்பற்றி கூறியுள்ள விடயங்களையும் இணைத்துள்ளேன்.
மதிப்பிற்குரிய பேராசிரியர் ஞானாம்மாவிடம் பிடித்த விடயம்….
எப்போதுமே ஞானாம்மாவிடம் தன்னடக்கம்,பொறுமை, அமைதி சிறுவர்களையும் மதிக்கும் குணம் மனதாராப் பாராட்டும் குணம் என்னை மிகவும் கவர்ந்தது.
எழுத்துலக படைப்பாளிகளுக்கு உங்கள் கோரிக்கை….
கோரிக்கை என்பதில்லை படைப்பாளிகள் தாங்கள் சொல்ல வரும் கருத்துக்களை தெளிவாகவும் எளிமையாகவும் ஆணித்தரமாகவும் சொல்ல வேண்டும். படைப்பாளிகளின் எழுத்தினால் பயனடைந்தவர்கள் மட்டுமே என்று இருக்க வேண்டும் . எழுத்தின் மூலம் பிரச்சினைகளை உருவாக்கி விடக் கூடாது.
நிறைவாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்…?
ஆம் நானும் இந்த நேரத்தில் நானும் பல உள்ளங்களுக்கு நன்றி கூற கடமைப்பாடுடையவனாகின்றேன். எல்லாம் வல்ல இறைவனுக்கும் அம்மையப்பனாக இருந்து என்னை இந்நிலைக்கு ஆளாக்கிய தந்தைக்கு முதல் நன்றி அன்னைக்கு நிகரான எனது ஆய்வு ஆசான் ஞானகுரு ஞானாம்மாவிற்கும் அவருக்கு பக்கபலமாக இருக்கும் குலேந்திரன் அங்கிளிற்கும் எனது சிரந்தாழ்ந்த நன்றிகள்.
ஆவுஸ்ரேலியா தமிழ்சங்கத் தலைவர் திரு.பழனியப்பன் குமாரசாமி அவர்களுக்கும் மாத்தளை சோமு அவர்களுக்கும் சிட்னி வேம்படி பழைய மாணவியர் சங்கத்தினருக்கும் அவுஸ்ரேலியா மூத்த தமிழர் சங்கத்தினருக்கும் தமிழ் மூத்த பிரஜைகள் சங்கத்தினருக்கும் சிட்னி சைவ மன்றத்தினருக்கும் ஸ்ரீ கிருஸ்ணா குலேந்திரன் குடும்பத்தினருக்கும் ஸ்ரீ நாராயிணி அபிமன்யூ குடும்பத்தினருக்கும் வத்சலா பகீரதன் குடும்பத்தினருக்கும்
திரு மனோகரன் மற்றும் திருமதி வடிவாம்பிகை தம்பதியினருக்கும் திரு.ஜெயரத்தினம் மற்றும் திருமதி. சுவாந்தி தம்பதியினருக்கும் Dr.பூகாம்பிகை மற்றும் Dr.பிறியகுமார் தம்பதியினருக்கும் திருமதி மாலினி பிரபாகரன் தம்பதியினருக்கும் ATBC வானொலி நிலையத்தின் திருமதி சோனா பிரின்ஸ் இம்மானுவேல் மற்றும் கார்த்திகா கணேசன் அவர்களுக்கும் எனது நேர்காணலை பதிவு செய்த திரு. நிக்சன் சர்மா அவர்களுக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள்.
இந்த நேர்காணலுக்காக நேரம் ஒதுக்கி எம்முடன் இணைந்திருந்தமைக்கு எமது நன்றிகள் தொடர்ந்து வரஇருக்கும் உங்கள் படைப்புக்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
நன்றி
– நிஜத்தடன் நிலவன்