குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தி மற்றும் அவரது ஆதரவாளர்களின் விடுதலையை வலியுறுத்தி யாழில் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழின உணர்வாளர்களை அடக்க முயன்றால் அவர்கள் மீண்டும் கொதித்தெழுவார்கள். இது அடக்குமுறையான நிலைமைக்கு இட்டுச்செல்லும் என தமிழக அரசிற்கும், இந்திய அரசிற்கும் கூறிக்கொள்ள விரும்புகிறோம் என வட.மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு எதிராக இயக்கத்தை ஆரம்பித்து வருடாவருடம் நினைவேந்தல் நிகழ்வை நடத்தி வந்தவர்கள் இவ்வாண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனநாயக போராளியொருவரை தடுத்து வைத்துள்ளமைக்கு எமது கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசையும், முதலமைச்சரையும் கோரி நிற்கிறோம்” என்றார்.