அ.தி.மு.க. அம்மா அணியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு இடையேயான மோதல் வலுத்துள்ள நிலையில், தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வருகிறனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாகவே தினகரன் குறித்து அமைச்சர்கள் யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின் மூலம் அமைச்சர்கள் தினகரனுக்கு எதிரான கருத்துகளை வெளியிட மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிற நிலையில், தினகரன் ஆதரவாளர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு இடையேயான கருத்து மோதல்கள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.