இலங்கையில், பிரபல மாகாண சபைகளாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகள் உள்ளது எனவும் அதற்கு காரணம் தமிழர்கள் தங்களுக்கான அதிகார பகிர்வை கோரி போராட்டங்கள் நடத்தியமையே எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையில், அதிகாரப்பகிர்வின் ஒரு கட்டமாக மாகாண சபைகள் வழங்கப்பட்ட போது, வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் உருவாகிய நிலைமையை அரசியல் ரீதியாக சமாளிக்கவே ஏனைய ஏழு மாகாணங்கள் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் மற்றும் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோர் வழங்கி இருந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு, தெற்கில் இருக்கின்ற மாகாணசபைகள் தானாக கிடைத்தவை எனவும் வடக்கு, கிழக்கிற்கு என தனியான மாகாணம் தானாக கிடைக்கவில்லை என்பதை பொறுப்பு உள்ளோர் உணர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.