பிரித்தானியா பாராளுமன்ற தேர்தல் நேற்று இடம்பெற்ற நிலையில், தற்போது முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், முடிவுகள் வெளியான ஆரம்பத்தில் முன்னிலை பெற்றிருந்த Labour கட்சியை பின்தள்ளி ஆளும் கட்சியான Conservatives கட்சி தற்போது முன்னிலை பெற்றுள்ளது.
650 உறுப்பினர்களை கொண்ட பிரித்தானியா பாராளுமன்ற தேர்தலில் தற்போது வரையில், 620 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், Conservatives கட்சி 298 ஆசனங்களை பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் முன்னிலை பெற்ற Labour கட்சி தற்போது 255 ஆசனங்களை பெற்று இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், இறுதி முடிவுகளின் அடிப்படையில் Conservatives கட்சி 318 ஆசனங்களையும், Labour கட்சி 267 ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, பிரித்தானியா பாராளுமன்றில் அறுதிப்பெறுபான்மையை பெற்றுக்கொள்ள 326 ஆசனங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.