மஹிந்த, ஆட்சியைவிட்டுச் செல்லும்போது எங்களது தலையில் கட்டிவிட்டுச் சென்றபிரச்சினைகளை நாங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம்.
இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் மேலும்கூறியுள்ளதாவது:-
மீதொட்டமுல்லகுப்பைமேடு மற்றும் சைட்டம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை அவர் எம்மிடம்விட்டுவிட்டுச் சென்றார்.அதுமாத்திரமன்றி அவர் பெற்ற அளவுக்கு அதிகமான சர்வதேச கடன்களை அடைத்துமுடிக்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.
இந்தச் சிக்கல்கள்அனைத்தையும் தாண்டி நாம் இந்த நாட்டை அபிவிருத்தி செய்வோம். ஜி.எஸ்.பி. பிளஸ்வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ளும் ஆற்றலை நாம் பெற்றோம். மஹிந்தஅணியினர் இது நடக்கும் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள்.
மஹிந்தவின் வீழ்ச்சிக்குப் பிறகு பாதாள உலகக் குழுவினர் தலைதூக்கிவிட்டனர்என்று இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். பாதாள உலகக் குழுவினரின் தேவை எமக்குஇல்லை. இவர்களை வைத்து நாம் தேர்தலில் வெற்றிபெறவில்லை.
ஆனால், மஹிந்த பாதாள உலகக் குழுவினரை எப்படிப் பயன்படுத்தினார்?, எப்படிஅவர்களின் உதவியைப் பெற்றார்?, எத்தனை குழுக்கள் அவருக்கு உதவின?,எவருக்கெல்லாம் அவர்கள் விருந்துபசாரம் நடத்தினார்கள்? போன்ற விவரங்கள்என்னிடம் உள்ளன. அவசியம் ஏற்பட்டால் அவர்களின் பெயர்ப்பட்டியலைவெளியிடுவதற்குத் தயங்கமாட்டேன்.
2008ம் ஆண்டு கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின்வெற்றியைத் தடுப்பதற்காக மஹிந்த பாதாள உலகக் குழுவினரைக் களத்தில்இறக்கியிருந்தார். அவர்கள் எம்மைப் பிரசாரம் செய்யவிடாமல் தடுத்தனர்.ஆனால், இன்று இவர்கள் நேர்மையானவர்கள்போல் பேசுகின்றார்கள்.
இவர்கள் அதிகம்துள்ளினால் அந்தப் பாதாள உலகக் குழுவினரின் பெயர் விவரங்களை வெளியிடுவேன். அதுதொடர்பில் எந்தத் தொலைக்காட்சியிலும் விவாதம் நடத்துவதற்கு நான் தயார்” -என்று தெரிவித்துள்ளார்.