பிரான்ஸில் 577 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இரு சுற்றுகளாக நாளையும், வரும் 18ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.
பிரான்ஸில் நாளையும், 18ஆம் திகதியும் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானின் கட்சி அதிக இடங்களை கைப்பற்றுமா என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு தொகுதியும் 125,000 மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
இந்த தேர்தலில் 577 உறுப்பினர்கள் பதவிக்கு 7882 பேர் போட்டியிடுகின்றனர்.
நாளை நடைபெறும் முதல் சுற்று வாக்குப்பதிவில் எந்த வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளை பெறவில்லையெனில், அதிக வாக்குகள் பெற்றுள்ள முதல் இரண்டு வேட்பாளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள்.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி வயது 48.5 ஆக கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், இதில் 42 சதவீதம் பேர் பெண்களாகும். தற்போது உள்ள 577 நாடளுமன்ற உறுப்பினர்களில் 155 பேர் பெண்களாகும்.
இந்த தேர்தலில், சமீபத்தில் பிரான்ஸ் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற இம்மானுவேல் மேக்ரான் சார்ந்திருக்கும் லிபரல் கட்சி எவ்வளவு பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்தல் வெற்றியின் மூலம் பெறும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதே போல லிபரல் கட்சிக்கு போட்டியாக தீவிர வலதுசாரி கட்சியும் அதன் தலைவர் மரைன் லெ பென்னும் வெற்று பெறும் நம்பிக்கையில் உள்ளனர்.
அதே போல சுதந்திர கட்சி, சோசியலிஸ்ட் கட்சி, இடதுசாரி போன்ற கட்சிகளும் தேர்தல் போட்டியில் களம் காணுகின்றன.
577 உறுப்பினர்களில் 289 உறுப்பினர்களை பெற்றால் மட்டுமே பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்.