லண்டனில் கடந்த 3ம் திகதி நடந்த தீவிரவாத தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கருதப்படும் தீவிரவாதிகள் மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்துள்ள அவுஸ்திரேலியாவை சேர்ந்த Candice Hedge(வயது 34) அன்று நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார்.
Borough Market Area-வில் உள்ள ரெஸ்டாரண்டில் தனது ஆண் நண்பருடன் டின்னரை சாப்பிட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராத சூழலில், தன் அருகே வந்த தீவிரவாதி கண்ணிமைக்கும் நேரத்தில் தொண்டையில் குத்தியதாகவும், அடுத்த கணமே நிலைகுலைந்து போனதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தொண்டையை இறுகப் பிடித்துக் கொண்டு ஓடிவந்ததாக கூறும் Candice Hedge தான் உயிர்பிழைத்தது அதிசயம் எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், உங்கள் அனைவருக்கும் நன்றி, உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி, நான் மீண்டு வந்துள்ளேன், சிறிய வலி தான் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
Candice Hedge கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே பிரிஸ்பேனிலிருந்து லண்டன் வந்தது குறிப்பிடத்தக்கது.