ஈரான் தலைநகர் தெஹ்ரானின் நேற்று ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 17 பேர் பலியானார்கள்.
இந்நிலையில் அடுத்ததாக சவுதி அரேபியாவிலும் தாக்குதல் நடத்தப்படும் என ஐஎஸ் தீவிரவாதிகள் வீடியோ மூலம் தற்போது மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த வீடியோ தெஹ்ரான் தாக்குதலுக்கு முன்பே எடுக்கப்பட்டது என உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வீடியோவில், 5 முகமூடி அணிந்த தீவிரவாதிகள் பேசுகிறார்கள். அதில், ஈரானுக்கு பிறகு உங்களுக்கான நேரமும் வரும். உங்கள் இடத்திலேயே வந்து தாக்குவோம் என மிரட்டல் விடுக்கின்றனர்.
மேலும், நாங்கள் யாருடைய ஏஜெண்டும் இல்லை என்றும், இறைவனுக்கு கட்டுப்பட்டு, அவருடைய உத்தரவின் பேரில் தான் நடக்கிறோம் எனவும் கூறியுள்ளனர்.
மதத்திற்காகவே நாங்கள் போராடுகிறோம் என்றும், ஈரானுக்காகவோ, சவுதிக்கோ போராடவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
ஐஎஸ் தீவிரவாதிகளின் இந்த மிரட்டலையடுத்து சவுதி அரேபியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.