வெள்ளப் பெருக்கினால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட தென்பகுதி மக்களுக்கு உதவும் நோக்குடன் மனிதாபிமான ரயில் பயணம் இன்று காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து காலை ஆறு மணிக்கு பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இந்த விசேட ரயிலில் பொதிகளை ஏற்றுவதற்கான 5 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த ரயில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மதவாச்சி, அனுராதபுரம், மாஹோ, கணேவத்த, குருணாகல், பொல்காவெல, அலவ்வ, அம்பேபுஸ்ஸ, மீரிகம, வெயங்கொட, கணேமுல்ல, கம்பஹா, ராகம, களனி, ஹுணுப்பிட்டிய, தெமட்டகொட, மருதானை, கொழும்பு கோட்டை, கல்கிசை, மொரட்டுவ, பாணந்துறை ஆகிய ரயில் நிலையங்களில் உதவிப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக நிறுத்தப்படவுள்ளது.
ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஆகியன இணைந்து ‘மக்கள் தொடர்பாடல்’ என்ற திட்டத்தின் கீழ் இந்த ரயில் சேவை நடைமுறைபடுத்துகின்றன.