இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஏனெனில் நடந்து முடிந்த அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போட்டியை வங்கதேசம் முழுதும் நம்பியிருந்தது.
அப்போட்டியை இங்கிலாந்து வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை வங்கதேசம் தக்க வைத்துக் கொள்ளும், அப்படி இருக்கையில் இங்கிலாந்து அணி, அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இதனால் வங்கதேச வீரர்கள் உட்பட வங்கதேச ரசிகர்களை அனைவரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாழ்வா, சாவா போட்டியில், இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானப் போட்டி என்பதால் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.
இதனிடையே இந்தப் போட்டி குறித்து, இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில், இது எங்களுக்கு மிகவும் முக்கியமானப் போட்டி, உணர்ச்சிவசப்படக்கூடாது.
முடிந்த அளவிற்கு இயல்பாக இருக்க வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும். இது போன்ற முக்கியமான போட்டியில், சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், உணர்ச்சிவசப்பட்டு தோற்றவர்கள் அதிகம். அமைதிதான் இந்தப் போட்டியை வெல்வதற்கான சக்தியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.