அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நேற்று அதிகாலை நீர்கொழும்பில் நடைபெற்ற விபத்தில் அம்புலன்ஸ் வண்டியை ஓட்டிச்சென்ற சாரதி மரணமடைந்ததாக கேள்விப்பட்டு அதிச்சியடைந்தேன்.
மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றும் உயரிய கடமையைச்செய்கின்ற அம்புலன்ஸ் சாரதிகள் போற்றப்படவேண்டியவர்கள். அந்த வகையில் அமரர் யோ.தயேந்திரன் அவர்கள் விபத்தில் மரணமடைந்தமை துர்ப்பாக்கியமானது.
அன்னாரது பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, விபத்தின்போது பாதிக்கப்பட்ட ஏனைய உத்தியோகத்தர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கின்றேன்’ என்று அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.