வடமேல் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக 1,83,130 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதில் புத்தளம் மாவட்டத்தின் 13 பிரதேச செயலகத்திற்குட்பட்ட 33 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளடங்குவதாகவும்,இதில் 23782 குடும்பங்களைச் சேர்ந்த 85758 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புத்தளம், கல்பிட்டி, வண்ணாத்திவில்லு, ஆனமடு, கருவலகஸ்வௌ, நவகத்தேகம, மகாகும்புகடவல,சிலாபம்,முந்தல் ,மஹாவ,ஆராச்சிக்கட்டு ,பள்ளம மற்றும் தங்கொட்டுவ ஆகிய எட்டுப் பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 5673 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அந்தப் பகுதியிலுள்ள பிரதேச செயலகங்களின் ஊடாகக் குடி நீர் வநியோகிப்பட்டு வருவதாக புத்தளம் மாவட்டத்தின் அனர்ந்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்தக் கடும் வரட்சியினால் மாவட்டத்திலுள்ள பல குளங்கள் வரண்ட நிலையில் காணப்படுவதினால் கால்நடைகள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளதுடன், கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களும் கருகிய நிலையில் காணப்படுகின்றது.