முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை தீக்கிரையாக்கிய நபர் பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் என தெரிவிக்கப்படுகின்றது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பொலிஸ்மா அதிபர் இதை தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக மஹரகம தொடக்கம் நுகேகொடை வரையான பிரதேசத்தில் அமைந்திருந்த முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் நான்கு தீக்கிரையாகி அழிந்து போயிருந்தன.
இது தொடர்பில் அண்மையில் ஒருவரை பொலிஸார் கைது செய்திருந்ததுடன், குறித்த நபரும் அதை ஒப்புக்கொண்டிருந்தார்.
எனினும் தற்போது குறித்த நபர் பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.