பிரித்தானியாவை சேர்ந்த கோடீஸ்வரர் குடும்பத்தவர்கள் என குறிப்பிட்டு இலங்கையர்கள் பலரை பேஸ்புக் ஊடாக நைஜீரிய நாட்டவர்கள் ஏமாற்றி பணம் பறித்துள்ளனர்
அவர் இலங்கைக்கு வருகை தந்து பேஸ்புக் ஊடாக அரசாங்க மற்றும் தனியார் பிரிவு அதிகாரிகள், வர்த்தகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பல பிரிவுகளை சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் பழகியுள்ளனர்.
பின்னர் அவர்களை ஏமாற்றி கோடி கணக்கில் பணம் கொள்ளையடித்துள்ளனர். இந்த நடவடிக்கையில் 10 நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல பதில் நீதவான் ஹேமன்ன வெத்தசிங்க உத்தரவிட்டுள்ளார்.
குற்ற விசாரணை திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முறைப்பாட்டிற்கமைய இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
குறித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிட்டத்தட்ட 3 மாத காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பின்னர் நிபந்தனை பிணையின் அடிப்படியில் விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்த போதிலும், அவர்களுக்காக எவரும் பிணை வழங்க முன்வராமையால் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறித்த மோசடி குழுவினர் காலி, பயாகல, உடுகம மற்றும் மாலபே உட்பட இலங்கையின் பல ஹோட்டல்களில் தங்கியிருந்து இந்த மோசடியை செய்வதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
காலியை சேர்ந்த பெண் ஒருவரின் வங்கி கணக்கில் 58 ஆயிரம் ரூபாய் பணம் இந்த சந்தேக நபர்களினால் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கோடி கணக்கில் மோசடியாக பெற்று கொள்ளப்பட்ட பணம் அரச மற்றும் தனியார் வங்கிகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.