சிரேஸ்ட ஊடகவியலாளர்
கதிர்காமத்தம்பி காலமானார்
சிரேஸ்ட ஊடகவியலாளர் செல்லையா கதிர்காமத்தம்பி இன்று புதன்கிழமை (05.04.2017) காலை அமரத்துவமடைந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 89.
ஊர்காவற்றுறை சென்.அன்ரனீஸ் கல்லூரியில் ஆசிரியராகவும் பின்னர் அங்கு அதிபராகவும் பணியாற்றிய அவர் சமநேரத்தில் பிராந்திய ஊடகவியலாளராகவும் பணியாற்றினார்.
ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகாலம் இவர் ஊடகவியலாளராகப் பணியாற்றினார்.
டெயிலி மிரர், டெயிலி நியூஸ் , தினகரன் மற்றும் சில பத்திரிகைகளுக்கு யாழ்.பிராந்தியச் செய்தியாளராக இவர் பணியாற்றினார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அச்சு ஊடகம் ஒன்றிலும் சிறிது காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
வட இலங்கைப் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட அவர், இறக்கும்வரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு கொக்குவில் தாவடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.