அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்திற்கு தடங்கலை ஏற்படுத்தும் குழுக்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
“இந்த விடயம் தொடர்பில் அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட சுற்று நிரூபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பொலிஸ் பிரிவுகளிலும் உள்ள சமூகங்களின் மத நல்லிணக்கத்திற்கு குறிப்பிட்ட பொலிஸ் நிலைய அதிகாரியே முழுமையான பொறுப்புடையவர்.
இதுவரை நுகேகொடை மற்றும் தந்துரை ஆகிய பிரதேசங்களிருந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி மேலும் தெரிவித்தார்.