மான்செஸ்டரில் ஆயிரக்கணக்கானோர் நடத்திய பேரணியில் பொலிசாருக்கும், மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பேரணி போராட்டமாக வெடித்தது.
பிரித்தானியாவின் மான்செஸ்டரில் சமீபத்தில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை கண்டித்து தீவிர வலதுசாரி எதிர்ப்பு இயக்கமான EDLன் முன்னாள் தலைவர் Tommy Robinson தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணி நேற்று நடைபெற்றது.
மான்செஸ்டரின் Piccadilly ரயில் நிலையத்தில் பேரணியை தொடங்கிய மக்கள் பிட்சாலி தோட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இந்த பேரணியை பாதுகாப்பாக நடத்த 400க்கும் அதிகமான பொலிசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
முதலில் அமைதியாக எல்லோரும் சென்று கொண்டிருக்க பின்னர் பொலிசாருடன் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் இது தள்ளுமுள்ளாக மாறியதையடுத்து பேரணி களம் போராட்ட களமாக மாறியது, இதில் பலர் காயம் அடைந்தனர்.
தாக்குதல் காரணமாக போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு நபரின் தலையிலிருந்து ரத்தம் கொட்டியது.
ஒரு போராட்டக்காரர் பன்றியின் தலையை வெட்டி இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து உயர் பொலிஸ் அதிகாரி John O’Hare கூறுகையில், ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்திய இந்த நாள் எங்களுக்கு சவாலாக இருந்தது.
இந்த நிகழ்வு குறித்து மிகவும் உணர்ச்சிவசப்படுவதாகவும், பதட்டம் நிறைந்ததாகவும் இருந்ததை என்னால் உணர முடிந்தது என கூறியுள்ளார்.
இந்த போரட்டத்தை பாதுகாப்பான வகையில் நடத்தி முடிக்க எங்களால் ஆன வழியை மேற்கொண்டோம் என கூறியுள்ள John, இந்த போராட்டத்தால் மான்செஸ்டர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என கூறியுள்ளார்.
போராட்டம் தொடர்பாக பொலிசார் இதுவரை 8 பேரை கைது செய்துள்ளனர்.