நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம், இரத்த அழுத்தம் மற்றும் புற்று நோய் போன்ற தொற்றா நோய்களினால் அதிகளவில் மரணங்கள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு மரணிப்போரில் அதிகளவானவர்கள் 60 வயதுக்கும் குறைவானவர்கள் என சுகாதார அமைச்சு நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
பாடசாலை மாணவ மாணவியரை உடல் பயிற்சியில் ஈடுபட ஊக்குவித்தல் உள்ளிட்ட தொற்றா நோய்களை தடுக்கும் பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்னவினால் இது குறித்த யோசனைத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இரத்த அழுத்தம், நீரிழிவு, புற்று நோய் மற்றும் மாரடைப்பு என்பனவே இலங்கையர்கள் எதிர்நோக்கி வரும் பிரதான சுகாதார பிரச்சினைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
போதியளவில் உடற்பயிற்சி மேற்கொள்ளாமை காரணமாக இளைஞர்கள் மத்தியிலும் இவ்வாறான நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் உயர்வடைந்துள்ளது.
எனவே, இவ்வாறான நோய்கள் ஏற்படுவதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.