வவுனியா மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேம்சங்கர் ஆகியோர் கொண்ட குழாம் முன்னிலையில் இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு, மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய பிரதம நீதியரசர் பிரியசாந் டெப் இந்த மூவரடங்கிய நீதிபதிகள் குழாமை அண்மையில் நியமித்திருந்தார்.
மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் 12 பேர் கைதுசெய்யப்பட்டு, அவர்களில் இருவர் அண்மையில் விடுவிக்கப்பட்டனர். 10 சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 9 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.