சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியை இலங்கை எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணி உள்ளது.
இந்நிலையில் இலங்கை அணியின் ஆல் ரவுண்டர் திசரா பெரேரா நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவர் தலையில் பந்து பட்டு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து பெரேராவுக்கு மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு பெரியளவில் காயம் ஏற்படவில்லை என இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனாலும் பெரேரா மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்றைய போட்டியில் பெரேரா விளையாடுவாரா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.