கடந்த 72 மணி நேரத்தில் 9 முறை பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இந்திய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே இருக்கும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்னகாதி செக்டார் அருகே இன்று காலை சுமார் 6.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சிறிய ரக குண்டுகளால் இந்திய பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக எல்லைப்பாதுகாப்பு படை துணை தளபதி மனிஷ் மேஹ்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.