அ.தி.மு.க. அணிகள் இணைவதற்காக அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டதாக ஓ.பன்னீர் செல்வம் கூறி இருந்தாலும், அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டும் என்று பொது மக்களும், கட்சியினரும் விரும்புவதால், இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
அணிகள் இணைப்புக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையின் பேரிலேயே குழு அமைக்கப்பட்டது. தற்போது ஓ.பி.எஸ். அணி சார்பில் அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டது பற்றி முதல்வருடன் ஆலோசித்த பின்னரே கருத்துக் கூறமுடியும்” என நிதியமைச்சர் ஜெயக்குமார் மேலும் தெரிவித்துள்ளார்.