ஈராக்கின் அல் ஸன்ஜிலி மாவட்டத்தின் வடக்கு பிராந்தியத்தை வெற்றிகரமாக கைப்பற்றியதாக தெரிவித்துள்ள ஈராக் இராணுவத்தின் 9ஆவது கவசப் படைப்பிரிவினர், அங்கு ஈராக்கின் கொடியினை ஏற்றியதாக குறிப்பிட்டுள்ளனர்.
அல் ஸன்ஜிலி மாவட்டத்தின் வடக்கு பகுதியிலுள்ள பயங்கரவாதிகள் முற்றாக விரட்டியடிக்கப்பட்டுள்ளதோடு, கூட்டுப் பொலிஸ் படை மற்றும் தீவிரவாத எதிர்ப்புப் படையினர் தொடர்ந்தும் முன்னேறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, இப் படையினர் ஷிங்கல் மற்றும் அல் சிஃபா உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்தும் முன்னேறிச் செல்வர் எனக் குறிப்பிட்டுள்ள இராணுவத்தின் 9ஆவது கவச படைப்பிரிவின் தளபதி, படையினருடன் தமது துரப்புக்களும் சேர்ந்து செயற்படுவர் என அறிவித்துள்ளார்.
ஐ.எஸ். பயங்கரவாதிகளை விரட்டியடிக்கும் படை நடவடிக்கைகளின் போது பெருமளவான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட போதிலும், இன்னும் ஏராளமான மக்கள் அங்கு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மீட்பு நடவடிக்கையின்போது, நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதோடு, உரிய மருத்துவ வசதிகள் கிடைக்காமல் பலர் நோய்வாய்ப்பட்டு காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் மோசூலின் பழைய நகர பகுதியிலுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையானது அரச படைகளுக்கு இன்னும் பாரிய சவாலாகவே அமைந்துள்ளது.