அவுஸ்திரேலியாவில் மலைப்பாம்பு ஒன்று பத்திரமாக சாலையை கடக்க வேண்டுமென்பதற்காக நபர் ஒருவர் சாலையின் குறுக்கே படுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் மேத்யூ, இவர் டம்பியர் போர்ட் எனும் பகுதியில் தனது நண்பருடன் சாலையில் பேசிக்கொண்டு சென்றுள்ளார்.
அப்போது சாலையில் நடுவே திடீரென்று சுமார் 2.5 மீற்றர் நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று சென்றுள்ளது.
அது போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் அந்த மலைப்பாம்பை ஏற்றிவிடும், இதனால் பாம்பு உயிரிழக்க நேரிடும் என்று எண்ணிய அவர் உடனடியாக பாம்புக்கு அரணாக சாலையில் படுத்துள்ளார்.
மலைப்பாம்பு சாலையை கடக்க ஏறத்தாழ 5 நிமிடங்கள் ஆகியுள்ளது. அதுவரை, பாம்புக்கு அருகில் சாலையில் படுத்திருந்த மேத்யூ, பாம்பு பத்திரமாக கடக்கும்வரை அதற்கு அரணாக இருந்துள்ளார்.
இச்சம்பவத்தை அவரது நண்பர் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.