கிழக்கு மாகாண முதலமைச்சர் 1700 பேருக்கு ஆசிரியர் தொழில் கொடுக்கப்போகின்றாராம். அதனை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். ஆனால் அதுகூட இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பது கவலையளிக்கின்றது.
ஆக 257 பேருக்கு வழங்கிவிட்டு காலத்தை கடத்த அவர் நினைக்கின்றார். அதுதான் அவரது அரசியலின் கடைசியாக இருக்கும் என எச்சரிக்கின்றோம். இன்னுமின்னும் 2012இலும் அதனை அடுத்துவரும் பட்டதாரிகளும் குறிப்பாக கலை வர்த்தக நுண்கலைப் பட்டதாரிகள் மிகவும் பாதிக்கப்பட உள்ளனர்.
நாட்டில் கலை வர்த்தக நுண் கலைத்துறைப் பட்டதாரிகளுக்கு வேலை இல்லையென்றால் இன்னுமின்னும் ஏன் அத்துறையை வைத்திருக்கின்றீர்கள். இழுத்து மூட வேண்டியதுதானே.
எங்களை ஏமாற்றுவதுபோல் எதிர்கால பட்டதாரிகளையும் ஏமாற்ற எண்ணுகிறீர்களா? கிழக்கு மாகாண ஆளுநரும் இந்த விடயத்தில் பாராமுகமாக இருப்பது எமக்கு வேதனையளிக்கின்றது.
பாராளுமன்ற குழுத் தலைவராக இருந்து இங்கு வந்த பேராசிரியர் மாரசிங்க எம்.பி. எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இப்படிப் பலர் எமக்களித்த 2 மாத கால வாக்குறுதி காற்றில் பறந்துவிட்டது.
நாம் யாரை நம்புவது? இருப்பினும் நாம் மனம் தளரவில்லை எமது போராட்டம் தொடரும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.