அமெரிக்காவுக்கு வருகை தருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இதையடுத்து ஜூன் 26 ஆம் திகதி மோடி அமெரிக்கா செல்ல இருக்கிறார். இந்த சந்திப்பில் இரு நாட்டுடனான உறவு மற்றும் பிற விஷயங்கள் குறித்து இருவரும் கலந்து பேச இருக்கிறார்கள்.
இதனை வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. பெரும்பாலும் அனைத்து நாட்டு தலைவர்களுடனும் பிரதமர் மோடி நட்பு பாராட்டி வருகிறார்.
ஆனால் ட்ரம்ப் அதிபராகப் பதவி ஏற்று ஐந்து மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போதுதான் பிரதமர் மோடி அவரைச் சந்திக்க செல்கிறார்.
இதற்கு முன் கடந்த ஆண்டு அதிபராக பராக் ஒபாமா இருந்த போது பிரதமர் மோடி, அமெரிக்கா சென்று வந்தார்.
அமெரிக்கா இந்தியா இடையிலான உறவை இந்தச் சந்திப்பு மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஹெச் 1பி விசா விவகாரம் உள்ளிட்ட அமெரிக்காவுடன் தொடர்புடைய பிரச்னைகள் இந்தச் சந்திப்பில் பேசப்படலாம் என்று கூறப்படுகிறது. இருவரிடையிலான முக்கியப் பேச்சுவார்த்தைகள் ஜூன் 26 ஆம் திகதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.